Sunday, February 15, 2009

இந்து திருமணச்சட்டமும்,அதன் பலவீனங்களும் பகுதி2

இவ்விதம் பல்லாயிரமாண்டுகளாக இந்து சமூத்தில் வழமையாகக் கடைபிடிக்கப்பட்டு வந்த பலதாரமணம் 1955ம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டது.எனினும் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின் பல்வேறு வகை மக்களிடமிருந்தும் எதிர்ப்பு ஏற்ப்பட்டது.ராவ் கமிட்டியின் அறிக்கையின்படி இச்சட்த்தின் காரணமாக ஹிந்து சமூகத்தில் முறை தவறிய தொடர்புகள் அதிகரிப்பதுடன் மதமாற்றத்திற்கும் வழிவகுக்கும் என அச்சம் தெரிவிக்கப்பட்டது.அவ்வறிக்கை இவ்வாறு கூறுகிறது:-
the argument of the oppenents were that monogamy would lead to increased conculinage and conversion to islam which permits four wives.they were of the view that "if a man healthy and wealthy he should be allowed to marry again and why should he be deprived of a right which has been enjoyed by him for three thousand years?
ஒருவனுக்கு ஒருத்தி மட்டுமே எனும் சட்டம் நெறி தவறிய தொடர்புகள் அதிகமாக வழிவகுப்பதுடன் உடலில் வலுவும் பொருளாதார வசதியும் உள்ள ஆண்மகன் நான்கு மனைவிகள் வரை மணம் புரிந்து கொள்ளலாம் " என அனுமதி அளிக்கும் இஸ்லாம் மார்க்கத்தின் பால் மதம் மாறுவதற்கும் காரணமாக அமைந்து விடும்.அத்துடன் மூவாயிரம் ஆண்டு காலமாக பயன் தந்து வந்த ஒன்றை அனுபவிக்கும் உரிமையை ஏன் ஒரு இந்துவுக்கு மறுக்க வேண்டும்?என எதிர்ப்பாளர்கள் வாதிட்டனர்.(studies in the hindu marriage and the special marriage acts p.261>
அவர்கள் தெரிவித்த அச்சம் உண்மையாயிற்று.நடைமுறையில் மருமணம் புரிய அவசியம் ஏற்பட்ட ஹிந்துக்கள் முஸ்லிமாக மாறி மணம் புரியும் தந்திரத்தை மேற்கொண்டனர்.ஏன் எனில் பலதார மண்ச் சட்டத்தின் அடிப்படையில் ஒருவன் குற்றவாளி என நிரூபிக்கப்பட இரண்டு நிபந்தனைகளை இந்து திருமணச் சட்டம் சுட்டிக்காட்டுகிறது.ஒன்று மணம் புரியும் ஆண் பெண் இருவரும் இந்துவாக இருக்கவேண்டும்.இரண்டு, திருமணம் இந்து திருமண முறைப்படி அவசியமான சடங்குகளுடன் நடந்திருக்கவேண்டும்.
ஒருவன் மதம் மாறி முஸ்லிம் என்ற முறையில் மணம் புரிந்தால் முதல் நிபந்தனை அடிபட்டுவிடுகிறது.இரண்டாவது நிபந்தனையில் solemnize சடங்குகளுடன் எனும் வார்த்தை இடம் பெற்றுள்ளது.இதன்படி ஒருவன் மணம் புரியும்பொழுது இந்து மதம் குறிப்பிடும் அனுஷ்டானங்கள்
சடங்குகள்,சம்பிர தாயங்களில் ஒன்றிரண்டு விடுபட்டாலும் அந்தத் திருமணம் நடைபெற்றதாகவே கருத இயலாது.இதன்படி ஒருவன் இரண்டாம் திருமணத்தைச் செய்த குற்றம் நிரூபிக்கப்பட வேண்டுமானால் இரண்டு திருமணமும் முறைப்படி நடைபெற்றதாக முதலில் நிரூபிக்கவேண்டும்.இரண்டில் ஒன்று முறை தவறி
நடைபெற்றிருந்தாலும் இந்தத்தடை சட்டத்தின் கீழ் அவனைக் குற்றவாளியாக்க முடியாது.சட்டத்திலுள்ள இந்தக் குறைபாட்டினைப் பயன்படுத்திக் கொண்டு ஒருவன் வேண்டுமென்றே ஒரு முக்கிய சடங்கினை விட்டு விட்டு இன்னொரு மனைவியை மணமுடித்துக் கொண்டு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.Before a person can be found punishable under this section it is necessary to determine the fact wheather there had been a subsequent marriage of a spouse during the lifetime of the other spouse from that point it has to be determined wheather the prior marriage was duly solemnized in case where either of the two marriage is found to be not duly soleminzed the position is that in the eye of the law there is only one legal and valid marriage making the charge of bigmay unsustanaible.the word "SOLEMNIZE"means to celebrate the marriage with proper ceremonies and in due form.it follows there fore that unless the marriage is celebrated or performed with proper ceremonies and in due form it cannot be said to be solemnized.
எனவே முதல் மனைவி இருக்க மறுமணம் செய்ய எண்ணும் இந்துவிற்கு இரு
வழிகள் இருக்கின்றன.ஒன்று மதம் மாறி மணம் புரிவது அல்லது தன் மதம் வலியுறுத்தும் சடங்குகளில் ஏதேனும் ஒன்றை விட்டுவிட்டு திருமணம் செய்வது.இந்த இரண்டில் எதனைச் செய்தாலும் 1955ம் ஆண்டு திருமணச் சட்டம் அவனை ஒன்றும் செய்ய இயலாது.
திட்டமிட்ட சூழ்ச்சி. தொடரும்

Saturday, February 14, 2009

இந்து திருமணச்சட்டமும் அதன் பலவீனங்களும்(பகுதி 1)

தடை வந்த பின்னனி
இந்து சமுதாயத்தில் பலதார மணம் என்பது பல்லாண்டு காலமாக நடைமுறையில் இருந்து வந்தது.அச்சமுதாயத்தில் அறிவு ஜீவிகள் எனப்படுவோர் போலித்தனமாக மேல்நாட்டு வாழ்க்கை முறையினைப் பின்பற்றி இந்நாட்டிலும் ஒருதார மண முறைச் சட்டத்தைக் கொண்டு வந்தனர்.
1955ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட HINDU MARRIAGE ACT இந்து திருமணச்சட்டம் பலதாரமணத்தினைத் தடை செய்தது.இச் சட்டப்படி இந்து மதத்தினைச் சேர்ந்த ஒரு ஆணோ, பெண்ணோ திருமணம் செய்யும் பொழுது இருவரில் யாருக்கும் சட்டப்பூர்வமான மற்றொரு துணை உயிருடன் இருக்ககூடாது.அவ்விதம் இருந்தால் இரண்டாம் திருமணம் செல்லாததாக (void) கருதப்படுவதுடன் அப்படிச் செய்பவர்கள் தண்டனைக் குரிய குற்றம் செய்தவர்களாவார்கள்.MODERN HINDU LAW -P.96
இவ்விதம் பல்லாயிரமாண்டுகளாக இந்து சமூகத்தில் வழமையாகக் கடைபிடிக்கப்பட்டு வந்த பலதாரமணம் 1955ம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டது.எனினும் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின் பல்வேறு வகை மக்களிடமிருந்தும் இதற்கு எதிர்ப்பு ஏற்ப்பட்டது.ராவ் கமிட்டியின் அறிக்கையின்படி இச்சட்த்தின் காரணமாக ஹிந்து சமூகத்தில் முறை தவறிய தொடர்புகள் அதிகரிப்பதுடன் மதமாற்றத்திற்கும் வழிவகுக்கும் என அச்சம் தெரிவிக்கப்பட்டது.அவ்வறிக்கை இவ்வாறு கூறுகிறது:-
the argument of the oppenents were that monogamy would lead to increased conculinage and conversion to islam which permits four wives.they were of the view that "if a man healthy and wealthy he should be allowed to marry again and why should he be deprived of a right which has been enjoyed by him for three thousand years?
ஒருவனுக்கு ஒருத்தி மட்டுமே எனும் சட்டம் நெறி தவறிய தொடர்புகள் அதிகமாக வழிவகுப்பதுடன் உடலில் வலுவும் பொருளாதார வசதியும் உள்ள ஆண்மகன் நான்கு மனைவிகள் வரை மணம் புரிந்து கொள்ளலாம் " என அனுமதி அளிக்கும் இஸ்லாம் மார்க்கத்தின் பால் மதம் மாறுவதற்கும் காரணமாக அமைந்து விடும்.அத்துடன் மூவாயிரம் ஆண்டு காலமாக பயன் தந்து வந்த ஒன்றை அனுபவிக்கும் உரிமையை ஏன் ஒரு இந்துவுக்கு மறுக்க வேண்டும்?என எதிர்ப்பாளர்கள் வாதிட்டனர்.<(ed)>
அவர்கள் தெரிவித்த அச்சம் உண்மையாயிற்று.நடைமுறையில் மறுமணம் புரிய அவசியம் ஏற்பட்ட ஹிந்துக்கள் முஸ்லிமாக மாறி மணம் புரியும் தந்திரத்தை மேற்கொண்டனர்.ஏன் எனில் பலதார மணச் சட்டத்தின் அடிப்படையில் ஒருவன் குற்றவாளி என நிரூபிக்கப்பட இரண்டு நிபந்தனைகளை இந்து திருமணச் சட்டம் சுட்டிக்காட்டுகிறது.ஒன்று மணம் புரியும் ஆண் பெண் இருவரும் இந்துவாக இருக்கவேண்டும்.இரண்டு, திருமணம் இந்து திருமண முறைப்படி அவசியமான சடங்குகளுடன் நடந்திருக்கவேண்டும்.
ஒருவன் மதம் மாறி முஸ்லிம் என்ற முறையில் மணம் புரிந்தால் முதல் நிபந்தனை அடிபட்டுவிடுகிறது.இரண்டாவது நிபந்தனையில் solemnize சடங்குகளுடன் எனும் வார்த்தை இடம் பெற்றுள்ளது.இதன்படி ஒருவன் மணம் புரியும்பொழுது இந்து மதம் குறிப்பிடும் அனுஷ்டானங்கள் சடங்குகள்,சம்பிர தாயங்களில் ஒன்றிரண்டு விடுபட்டாலும் அந்தத் திருமணம் நடைபெற்றதாகவே கருத இயலாது.இதன்படி ஒருவன் இரண்டாம் திருமணத்தைச் செய்த குற்றம் நிரூபிக்கப்பட வேண்டுமானால் இரண்டு திருமணமும் முறைப்படி நடைபெற்றதாக முதலில் நிரூபிக்கவேண்டும்.இரண்டில் ஒன்று முறை தவறி நடைபெற்றிருந்தாலும் இந்தத்தடை சட்டத்தின் கீழ் அவனைக் குற்றவாளியாக்க முடியாது.சட்டத்திலுள்ள இந்தக் குறைபாட்டினைப் பயன்படுத்திக் கொண்டு ஒருவன் வேண்டுமென்றே ஒரு முக்கிய சடங்கினை விட்டு விட்டு இன்னொரு மனைவியை மணமுடித்துக் கொண்டு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.Before a person can be found punishable under this section it is necessary to determine the fact wheather there had been a subsequent marriage of a spouse during the lifetime of the other spouse from that point it has to be determined wheather the prior marriage was duly solemnized in case where either of the two marriage is found to be not duly soleminzed the position is that in the eye of the law there is only one legal and valid marriage making the charge of bigmay unsustanaible.the word "SOLEMNIZE"means to celebrate the marriage with proper ceremonies and in due form.it follows there fore that unless the marriage is celebrated or performed with proper ceremonies and in due form it cannot be said to be solemnized.
(desai,kumud,indian law of marriage and divorce p.103)

எனவே முதல் மனைவி இருக்க மறுமணம் செய்ய எண்ணும் இந்துவிற்கு இரு வழிகள் இருக்கின்றன.ஒன்று மதம் மாறி மணம் புரிவது அல்லது தன் மதம் வலியுறுத்தும் சடங்குகளில் ஏதேனும் ஒன்றை விட்டுவிட்டு திருமணம் செய்வது.இந்த இரண்டில் எதனைச் செய்தாலும் 1955ம் ஆண்டு திருமணச் சட்டம் அவனை ஒன்றும் செய்ய இயலாது.
திட்டமிட்ட சூழ்ச்சி(தொடரும்)

Thursday, February 12, 2009

பலதார மணம்(2 பாகம்)

இந்து சமயத்தில் இஸ்லாமியச்சட்டம்
               கி.பி.1408ம் ஆண்டு மறைந்த பிரபல விஞ்ஞானி அபூரைஹான் அல்பைருனி அவர்கள்.பல ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து சமஸ்கிருத மொழியினைக் கற்று இங்குள்ள கலாச்சார பாரம்பரியத்தினை ஆழமாக ஆராய்ந்து ஓர் நூல் எழுதியுள்ளார்.அரபு மொழியில் எழுதப்பட்ட அந்நூல் கிதாபுல்  ஹிந்த் என்று பிரசித்து பெற்றது. அக்காலத்தில் இந்தியாவின் நிலையை பலதார மணச் சட்டங்கள் கொள்கையளவில் இஸ்லாமிய சட்டங்களுக்கு இணையாகவே இருந்துள்ளன.அவர் எழுதுகிறார்:"இங்கு ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நான்கு மனைவிவரை திருமணம் செய்ய அனுமதி இருக்கிறது.அதற்குமேல் மணம் புரியக்கூடாது எனினும் நான்கு  மனைவியரில் ஒருத்தி இறந்துவிட்டால் அந்த இடத்தை மற்றொரு பெண்ணை மணம் முடிப்பதைக் கொண்டு நிறைவு செய்யலாம்.அதே நேரத்தில் பெண்களின் நிலை என்ன?கணவன் மரணித்த பின் அவளுக்கு மறுமணம் முடிக்க அனுமதி இல்லை.இந்நிலையில் அவளின் முன் இரண்டே நிலைகள் மட்டுமே உண்டு.ஒன்று வாழ்நாள் முழுவதும் விதவையாக வாழவேண்டும் அல்லது "சதி" எனப்படும் தன்னைத்தானே எரித்துக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.இவற்றில் இரண்டாவது வழி தான் வாழ்நாள் முழுவதும் மனவேதனையுடன் வாழ்வதை விட தன்னைதானே எரித்துக்கொள்வதே சிறந்ததாகக் கருதப்பட்டது.   
வர்ணாசிரம அடிப்படையில் பலதாரமணம்
                    மேலும் அவர் எழுதுகிறார்:"இந்து சமூகத்தில் சிலரின் கருத்துப்படி வர்ணாசிரம அடிப்படையில் பலதாரமணம் புரிந்து கொள்ளலாம்.பிராமணர்கள் நான்கு மனைவிகள் வரையிலும்,ஷத்திரியர்கள் மூன்று மனைவிகள் வரையிலும்.வைசியர்கள் இரண்டு மனைவியர் வரையும், சூத்திரர்கள் ஒரு மனைவியும் திருமணம் செய்யலாம்.இந்நான்கு பிரிவினர்கள் தங்கள் ஜாதியிலோ அல்லது தங்களை விட தாழ்ந்த ஜாதிகளிடமிருந்தோ மணம் புரியலாம்.மாறாக, தங்களை விட உயர்ந்த ஜாதி பெண்ணை மணம் புரியக்ககூடாது.மேலும்,இப்படி கலப்பு மணம் செய்தவர்கட்கு பிறக்கின்ற குழந்தை தாயின் வழியினையே சேரும்.எடுத்துக்காட்டாக, பிராமண ஆண் பெண்ணுக்குபிறகும் குழந்தை பிரமணனாகவே கருதப்படும்.மாறாக,பிராமணன் சூத்திரப் பெண்ணை மணம்முடித்து அவர்கட்கு பிறக்கும் குழந்தை சூத்திர இனத்தினையே சாரும்.இச்சட்டம் வர்ணாசிரம சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது.மனிதகுல சமத்துவத்திற்கு எதிரானது.
                         டாக்டர்.லிபான் இதனை பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்."இந்து மதத்தில் பலதாரமணம் அனுமதிக்கப்பட்டிருந்தது.அத்தகைய வழக்கம் மேல்வர்க்க மக்களிடையே அதிகமாக இருந்தது.ஆனால் அடிமட்ட நிலையில் இருந்தவர்களிடையே பொதுவாகவே ஒரு மனைவியுடன் நிறுத்திக்கொள்ளும் வழக்கமே இருந்தது." 

இஸ்லாமிய சட்டத்தின் தனிச்சிறப்பு
              மேற்குறிப்பிட்ட விளக்கங்களிலிருந்து நாம் என்ன அறிந்துகொள்கிறோம்?இந்து சமுகத்தில் பலதாரமணம் ஏற்கப்பட்டிருந்தது.இஸ்லாமிய சட்டத்திற்கேற்ப  நான்கு மனைவியர் வரை மணமுடிக்க அக்காலத்தில் அனுமதி இருந்தது.ஆனால்,நடைமுறையில் யூதமதத்தினை போல்   அந்நான்கிற்கும் மேலும் மணமுடிக்கும் வழக்கம் இருந்தது.ஆனால்,இஸ்லாமிய சட்டத்தின் சிறப்பு என்னவென்றால் அது கண்டிப்பாக நான்கிற்கு மேல் இருக்ககூடாது என்று நிர்ணயிப்பதுதான்.
                          இதுதான் பண்டைய இந்து சமூகத்தின் பலதாரமணத்தின் நிலை.ஆனால்,இன்றைய இந்தியாவில் இந்து சமுதாயத்தில்பலதார மணத்தின் நிலை என்ன?இன்றும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட மனைவியரை மணமுடிக்கும் பழக்கம் இந்துக்களிடையே இருக்கிறது.இன்னும்,சொல்லப்போனால் முஸ்லிம்களை விட அதிகமாகவே இருக்கிறது.

இன்றைய இந்தியாவில் பலதாரமணம்
                1981ல் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வின்படி ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட மனைவியரைத் திருமணம் செய்யும் வழக்கம் முஸ்லிம்களுக்கு மத்தியில் 4.3%விழுக்காடு இருக்கின்றது.ஆனால்,அதேசமயம் இந்துக்களிடையே 5.6% என்ற வீதத்திலும், புத்த மதத்தினரிடையே  8%விழுக்காடும், பழங்குடி மக்களிடையே அதிகமாக 15% விழுக்காடும் இருக்கிறது.
Registrar general of indiaவின் அறிக்கையின்படி 1961ஆம் ஆண்டில் ஜைன மதத்தினரிடையே பலதார மணத்தின் விகீதாச்சாரம் 9% சதவீதமும் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி முஸ்லிம்களிடையே 4% விழுக்காடும்இந்துக்களிடையே 5.5% விழுக்காடும் பலதார மணம் வழக்கத்தில் இருக்கின்றது<ஸ்டேட்ஸ் மென் கொல்கத்தா 28/09/1984>
                  இந்திய அரசாங்கத்தின் Ministery of Education and social welfareன் கீழ் 1974ல் இந்தியாவில் பெண்களின் நிலையைப் பற்றி ஆராய அமைக்கப்பட்ட கமிட்டி அளித்த அறிக்கையின் படி இந்தியாவில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை மணம் முடிக்கும் வழக்கம் பல்வேறு காலக்கட்டத்தில் கீழ்க்கண்டவாறு இருந்தது.

               இனம்               1930          1941      1951
                                              to             to           to 
                                           1940          1950      1960  
-----------------------------------------------------------------------------------------------

       பழங்குடி இனம்       9.53%        17.53%   17.98%
                  இந்து                6.79%          7.15%     5.06%
       முஸ்லிகள்              7.29%          7.04%     4.31%
                    
                        <ரேடியன்ஸ் டெல்லி 24/11/1985>

                    மேற்குறிப்பிட்ட புள்ளி விவரத்தில் இருந்து பலதார மண வழக்கம் முஸ்லிம்களிடையே குறைந்து வருவதை அறிய முடிகிறது.1940ல் 7%        
பழக்கம்  1960ல் 4% சதவீதமாக குறைந்தது.இவ்வாறு   பல்வேறுபட்ட அறிக்கைகள் முஸ்லிம்கள்தான்  பலதார மணத்தில் முண்ணனியில் நிற்கின்றனர் என்ற துர்ப்பிரசாரத்தின் உண்மை சொரூபத்தையும் அதன் பிண்ணனியில் மறைந்து நிற்கும் தீய எண்ணத்தையும் வெளிப்படுத்துகின்றன.
            கலைக்களஞ்சியமும் கூறுகிறது
                                               ENCYCLOPEDIA BRITTANICA (பிரிட்டானியக் கலைக்கலஞ்சியம்) குறிப்பிடுவதற்கேற்ப     ஜார்ஜ் மர்டாக் என்பவரின் ஆய்வின்படி 250 கலாச்சார இனங்களில் 193 இனங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை மணமுடிக்கும் பழக்கம் இருக்கின்றது.அவருடைய 1949ம் ஆண்டின் அறிக்கையின்படி 554 இனத்தினர்களில் 415 இனத்தினர்களிடம் பலதார மணப்பழக்கம் நடைமுறையில் இருக்கின்றது.  
முஸ்லிம் நாடுகளின் நிலை
           இங்கு பரப்பப்டும் தவறான பிரச்சாரத்தின் காரணமாக ஒரு சந்தேகம் எழக்கூடும்.முஸ்லிம் நாடுகளில் பலதார மணம் என்பது அதிகமாக நடைமுறையில் இருக்குமோ என்பதே அந்த சந்தேகம்.ஆனால் வியக்கத்தக்க விதத்தில் முஸ்லிம் பலதார மணத்தைவிட ஒருவனுக்கு ஒருத்தி எனும் மனப்பான்மைதான் மிகைத்திருப்பதாக பிரிட்டானிக்கா களஞ்சியம் சுட்டிக்காட்டுகிறது
             மேலும்,கலைகளஞ்சியக் கட்டுரையாளர் இஸ்லாமிய ஷரிஅத் அனுமதி அளித்திருந்த போதும் முஸ்லிம்களிடையே பலதார மணத்தைவிட ஒருதார மணமே அதிகமாக இருப்பதை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்கிறார்.
           Encyclopedia  britannica VOL 7.p.155,1983> 

 நோக்கத்தைப் புரிந்து கொள்வீர்!
                  இதுதான் காம இச்சை மிக்கவர்கள் என்றும் ,நான்கு நான்கு மனைவிகளை மணமுடித்து பிள்ளைகளாகப் பெற்றுத்தள்ளுபவர்கள் என்றும் குற்றம் சாட்டப்படும் முஸ்லிம்களைப் பற்றிய புள்ளி விபரங்கள்.இவை மக்களைக் குழப்பிட  சிலர்  முனையும் பொய்மை பிரச்சாரத்திற்கும் உண்மைக்கும் எவ்வளவு தூரம் தொடர்பு இருக்கிறது என்பதை மேலெழுந்தவாறாக சிந்தித்தாலே உணர்ந்து கொள்ளலாம்.                      

Thursday, February 5, 2009

இந்தியாவும் பலதாரமணமும்

ஒரு துர்பிரச்சாரம்

மேலை நாட்டினர் செய்யும் பிரச்சாரத்தின் எதிரொலியாக கீழை நாட்டின் படித்தவர்கள் எனப்படுவோர் தங்களின் மேற்கத்திய குருமார்களின் ஜால்ராக்களாக இஸ்லாத்தின் பலதாரக் கொள்கையைக் கடுமையாக விமர்சிக்கின்றனர்.குறிப்பாக,இந்தியத் துணைக் கண்டத்தில் வசிக்கும் சிலர் தங்களைத் தாங்களே "முற்போக்கு வாதிகள்" என்றும் "அறிவுஜீவிகள்"என்றும் கூறிக்கொள்கொள்வோர் இக்கொள்கை பெண் இனத்திற்கு எதிராக இழைக்கப்படும் கொடுமை என்றும் சமூகத் தீமை என்றும் சாடுகின்றனர். ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியரைத் திருமணம் செய்வது சமூகரீதியில் பலன் தரத்தக்கதா இல்லை தீமை விளைவிப்பதா?என்பதைப் பின்னால் விரிவாக விவாதிப்போம். ஆனால் பலதாரமணத்திற்க்கு அனுமதி அளிப்பதையும்,அதனை நடைமுறையில் செயல்படுத்தி வருவதையும் ஒப்பு நோக்கினால் பண்டய கால இந்து சமூகத்தில் மட்டு மல்ல; இன்றைய இந்து சமூகத்திலும் பலதாரமணம் முஸ்லிம்களைவிட அதிகமாக இருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.இந்நிலையில் முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட மனைவிகளை மணம் புரிந்து குழந்தைகளைப் பெற்றுத் தள்ளுகிறார்கள் என்பது சிலரின் அரசியல் பிரச்சாரத் தந்திரமே தவிர உண்மை ஏதுமில்லை.

திசை திருப்பும் முயற்சி

பிரச்சனை என்னவென்றால்,முஸ்லிம்கள் சில நிபந்தனைகளுடன் ஒன்றுக்கு மேற்ப்பட்ட மனைவியரை மணம் முடித்துக் கொள்ளலாம் என அவர்களின் மார்க்கம் அனுமதி தந்திருக்கிறது.சிலர் பொதுச் சட்டம் என்ற பெயரில் அந்த உரிமையை பறித்திட முனைவதை முஸ்லிம்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.பிரச்சனையைத் திசை திருப்பிவிட சிலர் முஸ்லிம்கள் கணக்கின்றி குழந்தைகளைப்பெற பல பெண்களைத் திருமணம் செய்கின்றனர் எனக் கூக்குரலிடுகின்றனர்.ஆனால் நடை முறையில் பார்த்தால் விஷயம் நேர்மாறாக இருப்பதைக் காணலாம். எனவே,இங்கு நாம் முந்தைய ஹிந்து சட்டங்களிலிருந்தும் முன்னோர்களின் வாழ்க்கையிலிருந்தும் மேற்கோள்கள் காட்டுவதுடன் நவீன இந்தியாவில் பலதாரமணம் சம்பந்தமாக ஆய்வுகள் காட்டும் புள்ளிவிபரங்களையும் சமர்ப்பிக்க முயல்கிறோம்.அதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் எந்தச் சமுதாயத்தில் அதிகம் என்பது வெளிப்படுவதுடன் முற்போக்கு(?)என்ற பெயரில் இஸ்லாத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்வோரின் பொய் முகமூடியும் கிழிந்து விடும்.

பண்டைய இந்து சமுதாயத்தில் டாக்டர் அ.ச.அல்டேகர் என்பவர் The position of women in Hindu civilization என்னும் நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
it is true that Monogamay normally prevailed in Hindu society.The Vedic gods also are monogamous in paractice however polygamy often prevailed in the rich and ruling sections of socity.
ஒரு தார மணம் என்பது ஹிந்து சமுதாயத்தில் மேலோங்கி இருந்தது.வேதம் கூறும் பல கடவுள்களும் ஒரு தாரத்தினை உடையவர்களாக இருப்பினும் நடைமுறையில் பலதார மணம் என்பது பொருளாதாரத்தில் மேலோங்கி நின்றவர்களிடமும் ஆளும் வர்க்கத்தினர்களிடமும் அதிகம் இருந்தது. மேலும்,இந்து புராணங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை மணம் புரிந்ததற்கான ஆதாரங்கள் நிறைய கிடைக்கின்றன என்று சில ஆதாரங்களையும் குறிப்பிடுகின்றார்.
1.அரசு பதவிக்காக முடிசூடும் வைபவத்தின் போது அரசரின் அருகில் குறைந்தது நான்கு மனைவிகளாவது இருப்பது ஏற்புடைய தகுதியாகக் கருதப்பட்டது.

2.பிதர் மனுவிற்கு(FATHER MANU) பத்து மனைவியர்கள் இருந்ததாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
3.அயிடேரியா பிராமன்Aittaria Brahmana) நாட்டு மன்னன் ஹ்ரேஜ் சந்திராவிற்கு 100 மனைவியர்கள் இருந்தனர்.
4.இந்து மக்களால் வணங்கப்படும் அவதார புருஷர் ஸ்ரீராமரின் தந்தை தசரத மகாராஜாவிற்கு மூன்று மனைவிகள் இருந்தனர்.சமீபத்தில் இந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இராமயன நிகழ்ச்சியிலும் இதனைக் காட்டப்பட்டது.
பெண்களே விரும்பியது
முடிவாக ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை மணம் புரிவது அக்காலத்தில் முற்றிலும் வழக்கமாக இருந்ததை சமஸ்கிருதமே மேற்கோள்களுடன் ஆசிரியர் அல்டேகர் விவரித்துள்ளார்.மேலும் அவர் குறிப்பிடுகிறார்.அக்காலத்தில் பெண்கள் தங்களின் கணவனை மேலும் பல பெண்களை மணம் புரியும்படி கோருவர்.ஏன் என்றால்,அக்காலத்தில் திருமணம் என்பதின் நோக்கம் கணவனுக்கு உறுதுணையாக அவனுடைய தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வதுதான்.எனவே தனியாக இருந்து சிரமப்படுவதை விட இன்னும் சிலர் இருந்தால் தனக்கு உதவியாக இருக்குமே என எண்ணியே அப்பெண்கள் பலதர மணத்தினை விரும்பினார்.
குழந்தைக்காக மறுமணம்
அதே ஆசிரியர் காமசாஸ்திரத்தின் மேற்கோள்களுடன் மேலும் எழுதுகிறார். இந்து மதத்தில் திருமணத்தின் மூலம் ஆண்குழந்தையினைப் பெறுவது நிபந்தனையற்ற அவசியமாகக் கருதப்பட்டது. தன் மனைவி மலடியாக இருந்தால் குழந்தைக்காக மறுமணம் புரிவது ஆணுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.இன்னும் கூறப்போனால் மலடியான பெண் தன் கணவனை வேறோரு மணம் புரிய வற்புறுத்தவேண்டும் எனவும் சில நூல்கள் எழுதியுள்ளன.
ALTEKAR Dr..A.S The position of women in Hindu civilization. p.104 DELHI 1983
இந்தியாவும் பலதாரமணமும்(பாகம் 1)