Thursday, February 12, 2009

பலதார மணம்(2 பாகம்)

இந்து சமயத்தில் இஸ்லாமியச்சட்டம்
               கி.பி.1408ம் ஆண்டு மறைந்த பிரபல விஞ்ஞானி அபூரைஹான் அல்பைருனி அவர்கள்.பல ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து சமஸ்கிருத மொழியினைக் கற்று இங்குள்ள கலாச்சார பாரம்பரியத்தினை ஆழமாக ஆராய்ந்து ஓர் நூல் எழுதியுள்ளார்.அரபு மொழியில் எழுதப்பட்ட அந்நூல் கிதாபுல்  ஹிந்த் என்று பிரசித்து பெற்றது. அக்காலத்தில் இந்தியாவின் நிலையை பலதார மணச் சட்டங்கள் கொள்கையளவில் இஸ்லாமிய சட்டங்களுக்கு இணையாகவே இருந்துள்ளன.அவர் எழுதுகிறார்:"இங்கு ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நான்கு மனைவிவரை திருமணம் செய்ய அனுமதி இருக்கிறது.அதற்குமேல் மணம் புரியக்கூடாது எனினும் நான்கு  மனைவியரில் ஒருத்தி இறந்துவிட்டால் அந்த இடத்தை மற்றொரு பெண்ணை மணம் முடிப்பதைக் கொண்டு நிறைவு செய்யலாம்.அதே நேரத்தில் பெண்களின் நிலை என்ன?கணவன் மரணித்த பின் அவளுக்கு மறுமணம் முடிக்க அனுமதி இல்லை.இந்நிலையில் அவளின் முன் இரண்டே நிலைகள் மட்டுமே உண்டு.ஒன்று வாழ்நாள் முழுவதும் விதவையாக வாழவேண்டும் அல்லது "சதி" எனப்படும் தன்னைத்தானே எரித்துக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.இவற்றில் இரண்டாவது வழி தான் வாழ்நாள் முழுவதும் மனவேதனையுடன் வாழ்வதை விட தன்னைதானே எரித்துக்கொள்வதே சிறந்ததாகக் கருதப்பட்டது.   
வர்ணாசிரம அடிப்படையில் பலதாரமணம்
                    மேலும் அவர் எழுதுகிறார்:"இந்து சமூகத்தில் சிலரின் கருத்துப்படி வர்ணாசிரம அடிப்படையில் பலதாரமணம் புரிந்து கொள்ளலாம்.பிராமணர்கள் நான்கு மனைவிகள் வரையிலும்,ஷத்திரியர்கள் மூன்று மனைவிகள் வரையிலும்.வைசியர்கள் இரண்டு மனைவியர் வரையும், சூத்திரர்கள் ஒரு மனைவியும் திருமணம் செய்யலாம்.இந்நான்கு பிரிவினர்கள் தங்கள் ஜாதியிலோ அல்லது தங்களை விட தாழ்ந்த ஜாதிகளிடமிருந்தோ மணம் புரியலாம்.மாறாக, தங்களை விட உயர்ந்த ஜாதி பெண்ணை மணம் புரியக்ககூடாது.மேலும்,இப்படி கலப்பு மணம் செய்தவர்கட்கு பிறக்கின்ற குழந்தை தாயின் வழியினையே சேரும்.எடுத்துக்காட்டாக, பிராமண ஆண் பெண்ணுக்குபிறகும் குழந்தை பிரமணனாகவே கருதப்படும்.மாறாக,பிராமணன் சூத்திரப் பெண்ணை மணம்முடித்து அவர்கட்கு பிறக்கும் குழந்தை சூத்திர இனத்தினையே சாரும்.இச்சட்டம் வர்ணாசிரம சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது.மனிதகுல சமத்துவத்திற்கு எதிரானது.
                         டாக்டர்.லிபான் இதனை பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்."இந்து மதத்தில் பலதாரமணம் அனுமதிக்கப்பட்டிருந்தது.அத்தகைய வழக்கம் மேல்வர்க்க மக்களிடையே அதிகமாக இருந்தது.ஆனால் அடிமட்ட நிலையில் இருந்தவர்களிடையே பொதுவாகவே ஒரு மனைவியுடன் நிறுத்திக்கொள்ளும் வழக்கமே இருந்தது." 

இஸ்லாமிய சட்டத்தின் தனிச்சிறப்பு
              மேற்குறிப்பிட்ட விளக்கங்களிலிருந்து நாம் என்ன அறிந்துகொள்கிறோம்?இந்து சமுகத்தில் பலதாரமணம் ஏற்கப்பட்டிருந்தது.இஸ்லாமிய சட்டத்திற்கேற்ப  நான்கு மனைவியர் வரை மணமுடிக்க அக்காலத்தில் அனுமதி இருந்தது.ஆனால்,நடைமுறையில் யூதமதத்தினை போல்   அந்நான்கிற்கும் மேலும் மணமுடிக்கும் வழக்கம் இருந்தது.ஆனால்,இஸ்லாமிய சட்டத்தின் சிறப்பு என்னவென்றால் அது கண்டிப்பாக நான்கிற்கு மேல் இருக்ககூடாது என்று நிர்ணயிப்பதுதான்.
                          இதுதான் பண்டைய இந்து சமூகத்தின் பலதாரமணத்தின் நிலை.ஆனால்,இன்றைய இந்தியாவில் இந்து சமுதாயத்தில்பலதார மணத்தின் நிலை என்ன?இன்றும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட மனைவியரை மணமுடிக்கும் பழக்கம் இந்துக்களிடையே இருக்கிறது.இன்னும்,சொல்லப்போனால் முஸ்லிம்களை விட அதிகமாகவே இருக்கிறது.

இன்றைய இந்தியாவில் பலதாரமணம்
                1981ல் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வின்படி ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட மனைவியரைத் திருமணம் செய்யும் வழக்கம் முஸ்லிம்களுக்கு மத்தியில் 4.3%விழுக்காடு இருக்கின்றது.ஆனால்,அதேசமயம் இந்துக்களிடையே 5.6% என்ற வீதத்திலும், புத்த மதத்தினரிடையே  8%விழுக்காடும், பழங்குடி மக்களிடையே அதிகமாக 15% விழுக்காடும் இருக்கிறது.
Registrar general of indiaவின் அறிக்கையின்படி 1961ஆம் ஆண்டில் ஜைன மதத்தினரிடையே பலதார மணத்தின் விகீதாச்சாரம் 9% சதவீதமும் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி முஸ்லிம்களிடையே 4% விழுக்காடும்இந்துக்களிடையே 5.5% விழுக்காடும் பலதார மணம் வழக்கத்தில் இருக்கின்றது<ஸ்டேட்ஸ் மென் கொல்கத்தா 28/09/1984>
                  இந்திய அரசாங்கத்தின் Ministery of Education and social welfareன் கீழ் 1974ல் இந்தியாவில் பெண்களின் நிலையைப் பற்றி ஆராய அமைக்கப்பட்ட கமிட்டி அளித்த அறிக்கையின் படி இந்தியாவில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை மணம் முடிக்கும் வழக்கம் பல்வேறு காலக்கட்டத்தில் கீழ்க்கண்டவாறு இருந்தது.

               இனம்               1930          1941      1951
                                              to             to           to 
                                           1940          1950      1960  
-----------------------------------------------------------------------------------------------

       பழங்குடி இனம்       9.53%        17.53%   17.98%
                  இந்து                6.79%          7.15%     5.06%
       முஸ்லிகள்              7.29%          7.04%     4.31%
                    
                        <ரேடியன்ஸ் டெல்லி 24/11/1985>

                    மேற்குறிப்பிட்ட புள்ளி விவரத்தில் இருந்து பலதார மண வழக்கம் முஸ்லிம்களிடையே குறைந்து வருவதை அறிய முடிகிறது.1940ல் 7%        
பழக்கம்  1960ல் 4% சதவீதமாக குறைந்தது.இவ்வாறு   பல்வேறுபட்ட அறிக்கைகள் முஸ்லிம்கள்தான்  பலதார மணத்தில் முண்ணனியில் நிற்கின்றனர் என்ற துர்ப்பிரசாரத்தின் உண்மை சொரூபத்தையும் அதன் பிண்ணனியில் மறைந்து நிற்கும் தீய எண்ணத்தையும் வெளிப்படுத்துகின்றன.
            கலைக்களஞ்சியமும் கூறுகிறது
                                               ENCYCLOPEDIA BRITTANICA (பிரிட்டானியக் கலைக்கலஞ்சியம்) குறிப்பிடுவதற்கேற்ப     ஜார்ஜ் மர்டாக் என்பவரின் ஆய்வின்படி 250 கலாச்சார இனங்களில் 193 இனங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை மணமுடிக்கும் பழக்கம் இருக்கின்றது.அவருடைய 1949ம் ஆண்டின் அறிக்கையின்படி 554 இனத்தினர்களில் 415 இனத்தினர்களிடம் பலதார மணப்பழக்கம் நடைமுறையில் இருக்கின்றது.  
முஸ்லிம் நாடுகளின் நிலை
           இங்கு பரப்பப்டும் தவறான பிரச்சாரத்தின் காரணமாக ஒரு சந்தேகம் எழக்கூடும்.முஸ்லிம் நாடுகளில் பலதார மணம் என்பது அதிகமாக நடைமுறையில் இருக்குமோ என்பதே அந்த சந்தேகம்.ஆனால் வியக்கத்தக்க விதத்தில் முஸ்லிம் பலதார மணத்தைவிட ஒருவனுக்கு ஒருத்தி எனும் மனப்பான்மைதான் மிகைத்திருப்பதாக பிரிட்டானிக்கா களஞ்சியம் சுட்டிக்காட்டுகிறது
             மேலும்,கலைகளஞ்சியக் கட்டுரையாளர் இஸ்லாமிய ஷரிஅத் அனுமதி அளித்திருந்த போதும் முஸ்லிம்களிடையே பலதார மணத்தைவிட ஒருதார மணமே அதிகமாக இருப்பதை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்கிறார்.
           Encyclopedia  britannica VOL 7.p.155,1983> 

 நோக்கத்தைப் புரிந்து கொள்வீர்!
                  இதுதான் காம இச்சை மிக்கவர்கள் என்றும் ,நான்கு நான்கு மனைவிகளை மணமுடித்து பிள்ளைகளாகப் பெற்றுத்தள்ளுபவர்கள் என்றும் குற்றம் சாட்டப்படும் முஸ்லிம்களைப் பற்றிய புள்ளி விபரங்கள்.இவை மக்களைக் குழப்பிட  சிலர்  முனையும் பொய்மை பிரச்சாரத்திற்கும் உண்மைக்கும் எவ்வளவு தூரம் தொடர்பு இருக்கிறது என்பதை மேலெழுந்தவாறாக சிந்தித்தாலே உணர்ந்து கொள்ளலாம்.                      

No comments:

Post a Comment